முதலில் காலித் இப்போது ஸாஹிட் பிரதமருக்கு இந்த வாரம் நன்றாக இல்லை

khalid“அத்துமீறலுக்காக உள்துறை அமைச்சரும் ஐஜிபி-யும் விலக வேண்டும் என நாம்  சொல்கிறோம். நஜிப்பும் விதி விலக்கல்ல’

பூச்சோங் எம்பி: ஐஜிபி காலித் கௌரவம் இல்லாதவர்

எங்கள் வாக்கு: ஆகவே போலீஸ் படைக்குப் பொறுப்பேற்றுள்ள உள்துறை  அமைச்சர் மீது வணிகர் ஒருவரைத் தாக்கியதாகக் குற்றம் சாட்டப்பட்டு வழக்குப்  போடப்பட்டுள்ளது. அதே வேளையில் சக குடிமகன் ஒருவருடைய  மரணத்துக்கான காரணத்தை மறைத்ததாக அதே அமைச்சில் உள்ள தேசியப்  போலீஸ் படைத் தலைவரை நீதிமன்றம் கூறியுள்ளது.

ஒடின்: ‘இனம் இனத்தோடு சேரும்’ என்பது முதுமொழியாகும். தலைவர் நன்றாக  இல்லை என்றால் அவர் உள்துறை அமைச்சர் அகமட் ஸாஹிட் ஹமிடி, ஐஜிபி  காலித் அபு பாக்கார் போன்றவர்களைத் தான் சேர்ப்பார்.

சேரி நாய்: நஜிப் நிர்வாகம் ஏறத்தாழ முடங்கி விட்டதாகத் தெரிகிறது. அமைச்சர்கள், முதுநிலை அரசு அதிகாரிகள், போலீஸ் படையினர், மலேசிய  ஊழல் தடுப்பு ஆணையம், தேர்தல் ஆணையம் ஆகிய தரப்புக்களின்  வெறுக்கத்தக்க நடவடிக்கைகள் குறித்து பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் எதுவும்  பேசாமல் மௌனம் சாதிக்கிறார். எல்லாப் பிரச்னைகளும் கால ஒட்டத்தில்  கரைந்து விடும் என அவர் எண்ணுவதாகத் தெரிகின்றது.

Mcll#601257: நீதிபதி விடி சிங்கம் சொன்னதை செவிமடுத்த பின்னர் குகன்  மரணத்திற்கான காரணத்தை மறைத்ததற்காக காலித் கைது செய்யப்பட்டு குற்றம்  சாட்டப்பட வேண்டும் என நான் கருதுகிறேன். அவர் ஐஜிபி-யாக இருக்கலாம்.  ஆனால் வழக்குத் தொடரப்படுவதிலிருந்து அவருக்கு விலக்கு  அளிக்கப்படவில்லை.

தான் கிம் கியோங்: காலித்தும் ஸாஹிட்டும் உடனடியாக விலகுவது தான்  அவர்களுக்குக் கௌரவமானது.

போர்தான்: காலித்தும் கௌரவமும்? அந்த இரண்டு சொற்களும் ஒரே
சொற்றொடரில் இருப்பதை நான் விரும்பவில்லை. இது போன்ற போலீஸ்காரர்கள்  இருக்கும் போது நமக்கு கிரிமினல்கள் தேவை இல்லை.

பிபூத்தே: எல்லா புழுக்களும் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. நமது சமூகத்தில்  தலைவர்கள் எனக் கூறிக் கொள்கின்றவர்களுடைய கறைகளை வெளிப்படையாகச்  சொல்லும் கௌரவமான நீதிபதிகளும் நம்மிடம் உள்ளனர்.

அத்துமீறலுக்காக உள்துறை அமைச்சரும் ஐஜிபி-யும் விலக வேண்டும் என நாம்  சொல்கிறோம். நஜிப்பும் விதி விலக்கல்ல.

அடையாளம் இல்லாதவன்_4056: IPCMC என்ற போலீஸ் புகார்கள், தவறான  நடத்தை மீதான சுயேச்சை ஆணையத்தை ஐஜிபி-யும் முழு போலீஸ் படையும்  எதிர்ப்பதற்கான காரணம் இப்போது தான் புரிகிறது.

சீ3: கௌரவமான ஐஜிபி-க்கள் என யாருமே இல்லை. அவர்கள் அனைவரும்  அம்னோ சொல்வதைச் செய்தனர். அதனால் தங்கள் நேர்மையை விட்டுக்  கொடுத்தனர்.

மார்க் அந்தோனி: நஜிப்ப்புக்கு இது மோசமான வாரம். முதலில் ஐஜிபி குகன்  வழக்கில் குறை கூறப்பட்டார். அடுத்து வணிகர் ஒருவரைத் தாக்கியதாக உள்துறை  அமைச்சர் மீது சிவில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. திரங்கானு மாநில சட்டமன்ற
உறுப்பினர் ஒருவர் காலமானதும் அவருக்கு துரதிர்ஷ்டமாகும்.

பூமிஅஸ்லி: பூச்சோங் எம்பி கோபிந்த் சிங் டியோ அவர்களே, மலேசியாவில்  நீங்கள் அமைச்சராக அல்லது ஒரு துறைக்குத் தலைவராக வேண்டுமானால்  நீங்கள் போக்கரியாக, இனவாதியாக இருக்க வேண்டும் என்பதை நீங்கள் இன்னும்  உணரவில்லையா ? அந்தத் தகுதிகள் இல்லை என்றால் நீங்கள் தேர்வு செய்யப்பட
மாட்டீர்கள்.

 

TAGS: