தண்ணீர் சர்ச்சை குறித்து முக்ரிஸின் பேராளர்களைச் சந்திக்க லிம் மறுப்பு

1 limதண்ணீர் கட்டண விவகாரம் குறித்து கெடா அரசின் கீழ்நிலை அதிகாரிகளைச் சந்தித்துப் பேச பினாங்கு தயாராக இல்லை என்று அதன் முதலமைச்சார் லிம் குவான் எங் கூறினார்.

அவ்விவகாரம் குறித்து கெடா மந்திரி புசார் முக்ரிஸ் மகாதிருடன்  நேரடியாக விவாதிப்பதையே அவர் விரும்புகிறார்.

“உயர்நிலையில் சந்திப்போம். மூன்றாம் தரப்புகள் தேவையில்லை”. செய்தியாளர் கூட்டமொன்றில் இதைத் தெரிவித்த லிம், முக்ரிஸ், பினாங்கு வந்தால் அவருக்கு பினாங்கின் ‘நாசி காண்டார்’  விருந்து வைக்கவும் தயாராக இருக்கிறார்.