இஸ்லாத்துக்கு குழந்தைகளை மதம் மாற்றுவது சம்பந்தப்பட்ட கூட்டரசுப் பிரதேச சட்டத்தைத் திருத்தும் மசோதா மீது பிஎன் எம்பி-க்கள் தங்கள் மனச்சாட்சியுடன் வாக்களிக்க வேண்டும் எனப் பினாங்கு கெராக்கான் தலைவர் ஒருவர் அறிவுரை கூறியுள்ளார்.
அவ்வாறு ஆலோசனை கூறிய அந்தக் கட்சியின் மாநில சட்ட, மனித உரிமைப் பிரிவுத் தலைவர் பல்ஜித் சிங், அந்த திருத்த மசோதா தார்மீக ரீதியில் தவறு என வருணித்தார்.
கெரக்கான் உட்பட பிஎன் உறுப்புக்கட்சிகளுடன் கலந்தாய்வு செய்யாமல் அந்த மசோதா முன்மொழியப்பட்டுள்ளது குறித்து அவர் ஏமாற்றம் தெரிவித்தார்.
“பிஎன் -னில் ஒரு கட்சி மட்டுமே ஆட்சி புரிகிறது என்ற எண்ணத்தை அது உறுதிப்படுத்துகிறது,” என்றும் பல்ஜித் மலேசியாகினியிடம் சொன்னார். மலாய் முஸ்லிம்களை மட்டுமே உறுப்பினர்களாகக் கொண்ட அம்னோ அந்தத் திருத்தத்தை கொண்டு வந்துள்ளதை அவர் அவ்வாறு குறிப்பிட்டார்.
“மனமே” இல்லாத தே.மு. நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எங்கே இருக்கின்றது “சாட்சி”. இதுவும் வேண்டுமடா! இன்னமும் வேண்டுமடா! தே. மு. அருவடிகளுக்கு!
எங்கே வேதமூர்த்தி? .
எங்கே ஜம்பு லிங்கம் ?
எங்கே கணேசன் ?
நம்பிக்கை என்னவாயிற்று ?பிரதமர் அவர்களே !
எங்கே வேதமூர்த்தி? .
எங்கே ஜம்பு லிங்கம் ?
எங்கே கணேசன் ?
எல்லாரும் ஒரு மூலையிலே உட்கார்ந்து இருக்கானுங்க
ஆலோசனை சொன்னவர் பி.என். கட்சியைச் சார்ந்தவர். நமது தலைவர்கள் குறிப்பாக பழனிவேலு அவர்கள் பக்திப்பழம் என்பார்கள். நிச்சயமாக இந்த மசோதாவை இஸ்லாம் அல்லாதவர்கள் எதிர்ப்பார்கள் என உறுதியாக நம்புகிறோம். அவர்கள் நிம்மதியாக வெளியே நடமாட இந்த உறுதிப்பாடு அவர்களுக்குத் தேவை.
ஆஹா, நம்பிக்கை? எங்கேயடா அந்த உத்தம பிரதம மந்திரியும் அவருக்கு பின்னணி பாடிய ம.இ.க. பச்சோந்திகளும்?. சுப்ரமணியம், மலாய் மொழி மசோதாவுக்கும், அதே ஆங்கில மொழி பெயர்ப்பு மசோதாவுக்கும் வித்தியாசங்கள் என கோடி காட்டி தப்பித்துக் கொள்ளலாம் என்று பார்கின்றார்! ம.இ.க. தலைவரோ அறிக்கை விடலாமா அல்லது பேசாமல் மௌன சாமியாக இருக்கலாமா என்று எண்ணியவாறே தூங்கிக் கொண்டிருக்கின்றார்! முருகன் பெயரைக் கொண்டவரோ இந்து சங்கத்தின் பின்னே ஒளிந்துக் கொண்டு பேசுகின்றார். கமலத்துக்கு நாரதரோ, என்னை விட்டு விடுங்கள் என்று ஒதுங்கிக் கொள்வார்? அனைவரும் ஒன்று சேர இந்தியர்களுக்கு அரோகரா போட்டு மூன்று நாமம் சாத்தியதுதான் மிச்சம். போங்கடா நீங்களும் உங்கள் நம்பிக்கையும்.
இவர்கள் பிணத்தையே விட்டுவைக்க மாட்டார்கள் , குழந்தைகளைய விட்டு வைப்பார்கள் . இந்தியர்களே தயவு செய்து வாரத்திற்கு ஒரு முறையாவது பிள்ளைகளை குரு வழிபாட்டில் கலந்து கொள்ள செயுங்கள் அங்கே தான் நமது ஹிந்து மத உபன்யாசங்கள் சொல்ல படுகிறது . பல கோவில்கள் பெயருக்கு தான் உள்ளதே தவிர சமய விவகாரங்களில் தலையிடுவதில்லை . மதத்தில் எப்படி பர பட்சம் உள்ளதோ அதே போலதான் நம் இந்தியர்களின் வேலையும் சம்பளமும் .. இதுவும் கடந்து போகும் .
எங்கே போய்டான் நம்பிக்கை கலைவாணன்?இதற்கெல்லாம் வாயை திறக்கமாடானே இவன்!போங்கடா பயன்தாங்கோளின்களா!