முஸ்லிகளுக்கு மட்டும்தான் ‘அகதிகள்’ தகுதி வழங்கப்படுகிறது என்பதில் உண்மையில்லை. குடிநுழைவுத் துறைதலைமை இயக்குனர் அலியாஸ் அஹ்மட், குடியேறிகள் மீதான அரச விசாரணை ஆணையத்திடம் (ஆர்சிஐ) இவ்வாறு கூறினார்.
அகதிகள் தகுதி பெற்ற பலர் பிலிப்பீன்சிலிருந்து வந்த முஸ்லிம்களாக இருக்கிறார்கள் என்றால் பிலிப்பீன்ஸ் அண்டைநாடாக இருப்பதுதான் காரணமாகும் என்றாரவர்.
“நமது அண்டைநாடுகளில் வசிப்போரில் பெரும்பாலோர் முஸ்லிம்கள்.
“ஆனால், அகதிகள் தகுதி பெறும் அனைவருமே முஸ்லிம்கள் அல்லர். அதில் முஸ்லிம்-அல்லாதாரும் உள்ளனர்”, என அலியாஸ் ஆர்சிஐ-இடம் தெரிவித்தார்.
அகதிகளாக வேண்டும் என்றால் கண்டிப்பாக முஸ்லிமாக வேண்டும் என்பதுதான் உண்மை .