சிம்பாங் ரெங்காம் எம்பிக்கு எதிராக பக்காத்தான் தீர்மானம்

jelutong mpபக்காத்தான் ரக்யாட், சிம்பாங் ரெங்காம் எம்பி லியாங் டெக் மெங்கை நாடாளுமன்ற உரிமை, சலுகைக் குழுவின் விசாரணைக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்று கூறும் தீர்மானம் ஒன்றை நேற்று பதிவு செய்தது.

ஜெலுத்தோங்  டிஏபி எம்பி ஜெப் ஊய் (இடம்),  மற்ற பக்காத்தான் எம்பிகளின் ஆதரவுடன் அந்தத் தீர்மானத்தை மக்களவைத் தலைவர் பண்டிகார் அமின் மூலியாவிடம் ஒப்படைத்தார்.

ஆனால், தீர்மானத்தை விவாதிப்பது பற்றி பண்டிகார் இதுவரை எதுவும் சொல்லவில்லை.

மாற்றரசுக்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிமுக்கு 20 வெளிநாட்டு வங்கிகளில் கணக்கு இருப்பதாக சொன்ன லியாங்மீது பக்காத்தான் எம்பிகள் கடுப்பாக உள்ளனர்.