எகிப்து: மீண்டும் ராணுவ புரட்சி ; வீட்டுச் சிறையி்ல் அதிபர் மோர்ஸி

worldnews04713bகெய்ரோ: எகிப்து நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பத்தை தொடர்‌ந்து அந்நாட்டு அதிபர் மோர்ஸி யை ராணுவம் அதிரடியாக அதிபர் பதவியில் இருந்து நீக்கியது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் எகிப்து நாட்டி்ன அதிபராக நீண்ட காலம் பதவி வகித்து வந்த ஹோஸ்னிமுபாரக்கைபதவி விலக வலியுறுத்தி மக்கள் போராட்டம் வெடித்தது. இதனையடுத்து முபாரக் அதரடியாக நீக்கப்பட்டு ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்தப்பட்டது. தேர்தல் முகம்மது கோர்ஸி அதிபராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் மோர்ஸிக்கு எதிராக போராட்டம் வெடித்தது. அதிபரின் ஆதரவாளர்களுக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே கலவரம் மூண்டது.

இதனைஅடுத்து அதிபர் ‌மோர்ஸி அரசுக்கு ‌ சொந்தமான டி.வியில் அதிபர் மோர்ஸி பேசுகையில் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளதால் பதவி விட்டு விலக மாட்டேன். நாட்டுக்காக தொடர்ந்து பாடு‌படுவேன் என் கூறினார். தொடர்ந்து நடைபெற்ற வன்முறை சம்பவங்களினால் சுமார் 15-க்கும் மேற்பட்டோர் பலியாயினர்.

அதிபரை நீக்க வலியுறுத்தி நடைபெறற போராட்டம் வன்முறையாக மாறியதையடுத்து ராணுவம் அதிபர் மோர்ஸி பதவி விலக 48 மணி நேரம் கெடு விடுத்தது. ராணுவம் விடுத்திருந்த கெடு முடிந்தநிலையில் ராணுவம் தலைநகர் கெய்ரோவில் உள்ள அதிபர் மாளிகையை அதிரடியாக முற்றுகையிட்டது.

இதனை ‌தொடர்ந்து அதிபர் பதவி விலகியதாகவும், அரசியல் சாசன சட்டத்தை ரத்து செய்வதாகவும் ராணுவம் அதிரடியாக அறிவித்தது. மேலும் விரைவில் தேர்தல நடைபெற நடவடிக்‌கை மேற்கொள்ளப்படும் எனவும் அறிவித்துள்ளது.

இதனை தொடர்ந்து இடைக்கால அதிபராக எகிப்து நாட்டின் உச்சநீதிமன்ற நீதிபயான மகர் எல் பெஹய்ரி இடைக்கால அதிபராக பதவி வகிப்பார் என ராணுவ தளபதி அபடெல் அல் சிசி தெரிவித்துள்ளார் .

முன்னதாக அதிபர் மோர்ஸியில் அமைச்சரவையில் அமைச்சர்களாக இருந்த நான்கு அமைச்சர் கள் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். மேலும் பதவி நீக்கம் செய்யப்பட்ட மோர்ஸி வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர் வெளி நாட்டிற்கு செல்வதை தடுக்கவும் தீவிர கண்காணிப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக ராணுவ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.