‘இனவாதப் போக்குடைய மருத்துவர்கள் நீக்கப்பட வேண்டும். காரணம் அவர்கள் மருத்துவராக சேவை செய்வதற்கு எடுத்துக் கொண்ட உறுதிமொழியை மீறுகின்றனர் என பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங் சொல்கிறார்.
அந்த விவகாரம் மீது விசாரித்து பொருத்தமான நடவடிக்கை எடுப்பதற்கு, இனவாதிகள் எனத் தாம் கூறிக் கொள்ளும் மருத்துவர்களுடைய பெயர்களை அம்னோ பினாங்கு துங்கால் சட்டமன்ற உறுப்பினர் ரோஸ்லான் சைடின் அம்பலப்படுத்த வேண்டும் என்றும் லிம் கேட்டுக் கொண்டார்.
செபராங் பிராயிலும் கெப்பாளா பாத்தாஸிலும் மூன்று சீன மருத்துவர்கள் மலாய் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மறுத்துள்ளதாக ரோஸ்லான் கடந்த புதன் கிழமை மாநிலச் சட்டமன்றத்தில் கூறினார்.
ரோஸ்லான் தாம் கூறிக் கொண்டதற்கு ஆதாரத்தை காட்ட இயலாது போனால் அவர் அதனை உடனடியாக மீட்டுக் கொண்டு நாடு முழுவதும் உள்ள மருத்துவர்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்ள வேண்டும் என்றும் லிம் வலியுறுத்தினார்.
சின பயல்க மருத்துவ சிகிச்சைக்கு மாற்றுமா சொல்றாங்ஞ, குறிப்பா இந்தியர்கள் சின பயல்ட்ட( கடையிலோ, அலுவலகத்திலோ மற்ற எதாச்சும்) கேட்டுப்பாருங்கே அவன்கே முகம் பன்.. மாதிரி மாறிரும்.. அவங்கே இனம் மற்றும் தான் நல்லா மலேசியாவில் வாழனும் மத்தவன்லாம் நல்ல படியா வாலக்கூடாது என்று நினைபான்கே.
யரோ அம்னோ காரன் அவிழ்து விட்ட கதையை நம்பி எல்லா சீன இனத்து டா க்டர்களை குறை சொல்லாதிர்கள் . என் அனுபவத்தில் சில நல்ல இளைய சீன டாக்டர்கள் தரமான சிகிச்சை வழங்கி இருக்கிறார்கள். எல்லா மருத்துவர்கள்ளும் இனம் மொழி தரம் பார்க்காமல் சேவை செய்வோம் என்று உறுதி மொழி எடுத்து தான் இந்த தொழிலுக்கு வந்து இருக்கிறார்கள்.