எகிப்து: எல்பராதே பிரதமராக நியமிக்கப்படுவது சந்தேகம்!

worldnews07713aஎகிப்தில் சீர்திருத்தங்களைக் கோரும் எதிரணி லிபரல் கூட்டணி தலைவர் மொஹமட் எல்பராதே நாட்டின் இடைக்கால பிரதமராக நியமிக்கப்படவில்லை என்று அந்நாட்டின் புதிய அதிபர் அறிவித்துள்ளார்.

முன்னதாக, எல்பராதே பிரதமராக நியமிக்கப்படவுள்ளதாக அதிபர் அலுவலகத்திலிருந்து வந்த தகவல்களை மறுதலித்து இந்த புதிய அறிவிப்பு வந்துள்ளது.

அவரை பிரதமராக நியமிக்கும் முடிவை கடுமையாக விமர்சித்த சலாஃபி வாத அல் நவ்ர் கட்சி, அவருடன் ஒத்துழைத்து நடக்க மறுப்பு தெரிவித்தது.

மீண்டும் முன்னாள் அதிபர் மொர்ஸி பதவிக்கு வரவேண்டும் என்று கோருகின்ற அவரது ஆதரவாளர்கள் எல் பராதேவின் நியமனத்தை எதிர்க்கின்றனர்.

ஆனால் பிரதமராக அறிவிக்கப்படக் கூடியவர்களின் பட்டியலில் எல்பராதே-வின் பெயரே பெரும்பாலும் கவனத்தில் எடுக்கப்படுவதாக செய்திகள் கூறுகின்றன.

இடைக்கால அதிபர் அத்லி மன்சூர் கூட்டிய கூட்டமொன்றில் எல்பராதேயும் மற்றக் கட்சிகளின் தலைவர்களும் கலந்துகொண்டுள்ளனர். -BBC