பால் லாவ் ‘முதிர்ச்சியற்றவர் சிறுபிள்ளைத்தனமானவர்’ என்கிறார் ராபிஸி

news09713bவிளம்பரத்துக்கு அலையும் அரசியல்வாதிகள் மலேசிய ஊழல் தடுப்பு  ஆணையத்தில் (எம்ஏசிசி) புகார் செய்வதாக கூறியுள்ள பிரதமர் துறை அமைச்சர்  பால் லாவ், ‘முதிர்ச்சியற்றவர் சிறுபிள்ளைத்தனமானவர்’ என பண்டான் எம்பி  ராபிஸி இஸ்மாயில் வருணித்துள்ளார்.

அத்தகைய அரசியல்வாதிகள் ‘விவரங்களை வழங்குவதில்லை’ என்றும் அதனால்  எம்ஏசிசி புலானாய்வுக் கோப்புக்களைத் திறப்பது சிரமமாக இருக்கிறது என்று  லாவ் நேற்று சொன்னதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

“எம்ஏசிசி-யிடம் சமர்பிக்கப்பட்ட புகார்களில் எத்தனை அந்த
அரசியல்வாதிகளினால் தாக்கல் செய்யப்பட்டன என்பதை பால் லாவ் தெரிவிக்க  வேண்டும்,” என பிகேஆர் வியூக இயக்குநருமான ராபிஸி நாடாளுமன்ற  வளாகத்தில் நிருபர்களிடம் கூறினார்.