அல்கைதா பயங்கரவாத வலயமைப்பின் முன்னாள் தலைவர் ஒசாமா பின் லாடன் இரண்டு ஆண்டுகளுக்கு முன் கொல்லப்பட்டது ஒரு கொலைக் குற்றச் செயல் என்றும், அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா அதற்கு வெளிப்படையாகவே ஒப்புதல் அளித்திருந்தார் என்றும் வர்ணிக்கும் பாகிஸ்தானிய அரசாங்க அறிக்கை ஒன்றின் வெளியில் கசிந்த ஒரு வடிவத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின் லாடன் சரணடைந்திருந்தால் அவரை உயிரோடுதான் பிடித்திருப்போம் என்று அமெரிக்க அரசங்கம் கூறியிருந்தது.
அல் ஜசீரா தொலைக்காட்சியிடம் கசியவிடப்பட்டிருந்த இந்த அரசாங்க அறிக்கை, ஒபாமா பாகிஸ்தானில் தங்கியிருந்ததை கண்டுபிடிக்கத் தவறியமைக்காக பாகிஸ்தான் அரசையும், இராணுவத்தையும் கடுமையாக விமர்சிக்கிறது.
பாகிஸ்தானில் பின் லாடன் தங்கியிருந்த 9 ஆண்டு காலத்தில் 6 வருடங்கள் பாகிஸ்தானின் இராணுவ பயிற்சிப் பள்ளி ஒன்றின் அருகே அவர் வாழ்ந்துள்ளார் என்பதைக் கண்டறியத் தவறியது நாட்டின் உயர் அதிகாரிகள் மோசமாக செயல்திறனற்று இருந்தனர் என்பதை எடுத்துக் காட்டுவதாக அவ்வறிக்கை குற்றம்சாட்டுகிறது.
பாகிஸ்தானிய அத்காரிகள் மோசமாக செயல்திறனற்று இருந்தனர்.