மக்களவையில் உள்துறை அமைச்சர் அஹ்மட் ஜஹிட் ஹமிடி-இடம் அவர்மீதுள்ள போலீஸ் புகார் குறித்து கோபிந்த் சிங் டியோ (டிஏபி-பூச்சோங்) கேட்கப்போக அவையில் அமளி சூழ்ந்தது.
அரச உரைமீதான விவாதத்தின்போது தம் அமைச்சு தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு அஹ்மட் ஜஹிட் விளக்கமளித்துக் கொண்டிருந்தபோது அவர்மீதுள்ள தாக்குதல் வழக்கு பற்றி கோபிந்த் வினவினார். அதனால் ஆத்திரமடைந்த ஜஹிட் கோபிந்தைத் திட்டினார். இருவருக்குமிடையில் வாக்குவாதம் மூண்டது.
ஜஹிட் மீது தொடுக்கப்பட்டுள்ள அந்த சிவில் வழக்கில் கோபிந்த் சிங்தான் வழக்குத் தொடுத்தவரின் வழக்குரைஞராவார்.
இவன் எல்லாம் மந்திரி. மக்களை வழி நடத்தும் இவர்களை போன்றோர் அடி தடியில் இறங்குவது மலேசியா அரசியலுக்கு ஒரு கேவலமான நிலையை உருவாகி விட்டது . இது போன்ற அரசியல்வாதிகளை தூக்கி எறிய வேண்டும்