கிளந்தான் செலிஸிங் சட்டமன்றத் தொகுதிக்கான தேர்தல் முடிவை எதிர்த்து பாஸ் வேட்பாளர் டாக்டர் சைபுல் பாஹ்ரிம் முகமட் செய்து கொண்ட மனுவை கோத்தா பாரு தேர்தல் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.
அந்த மனுவைத் தள்ளுபடி செய்த நீதிபதி டத்தோ ஸாமானி அப்துல் ரஹிம், மனு முழுமையாகத் தாக்கல் செய்யப்படவில்லை என்று கூறினார்.
மே 5 தேர்தலில் பாஸ் வேட்பாளர் பிஎன் -னின் சுல்கிப்லி அலியிடம் 107
வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி கண்டார்.