சிறப்புப் பிரிவு பணியாளர் எண்ணிக்கையைத் தெரிவிக்க அமைச்சு மறுப்பு

1 junaiபூலாய் டிஏபி எம்பி தியோ நை சிங், போலீசில்  பணிபுரிவோர் எண்ணிக்கையைத் தெரிவிக்குமாறு மக்களவையில் கேட்டிருந்தார்.

அதற்கு உள்துறை அமைச்சு சிறப்புப் பிரிவு (Special Branch), சிறப்புப் பணிப்படை பிரிவு ஆகியவை தவிர்த்து மற்ற பிரிவுகளில் பணியாற்றுவோர் எண்ணிக்கையை மட்டும் தெரிவித்தது.

இதற்கு விளக்கமளித்த உள்துறை துணை அமைச்சர் வான் ஜுனாய்டி வான் ஜாப்பார், சிறப்புப் பிரிவில் உள்ளவர்கள் எண்ணிக்கையைக் கொடுக்கவியலாது என்றார்.

“சிஐஏ, எம்ஐ 6 போன்ற உளவுத் துறைகள்கூட தங்கள் பணியாளர்கள் எண்ணிக்கையைத் தெரிவிப்பதில்லை. சிலவற்றை வெளியிட இயலாது”, என்றார்.