நேரத்தை அளவிட மேலும் துல்லியமான ஒரு முறையை தாம் கண்டுபிடித்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
1960கள் முதல், அணுக் கடிகாரங்கள், அணுவில் ஒழுங்காக ஏற்படும் அதிர்வுகள் மூலம், செக்கன்களை அளவிடும் வகையில் செயற்பட்டு வருகின்றன.
ஆனால், லேசர் ஒளியில் ஏற்படும் வேகமான அதிர்வுகளைக் கொண்டு மேலும் துல்லியமாக செக்கன்களை அளவிடும் ஒரு புதிய வகை அணுக்கடிகாரத்தை உருவாக்கியிருப்பதாக பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஆய்வாளர்கள் கூறியிருக்கிறார்கள்.
ஆப்டிகல் லட்டைஸ் கடிகாரங்கள் என்று பெயரிடப்பட்டுள்ள இந்தக் கடிகாரங்கள், 30 கோடி ஆண்டுகளுக்கு ஒரு தடவைதான் ஒரு செக்கனை குறைவாக மதிப்பிடுமாம்.
மிக, மிக துல்லியமாக நேரத்தை கணிப்பிடுவது என்பது தொலைத்தொடர்பு, செய்மதி வழிகாட்டி மற்றும் பங்குச் சந்தைச் செயற்பாடுகள் போன்ற தொழிற்துறைக்கு மிகவும் முக்கியமாகும்.
நேரம் சரி இல்லையென்றால் ,(ஒரு மதம் சொல்கிறது ) துல்லியமான கடிகாரம் கண்டு பிடிப்பதால் என்ன பயன் !
நந்தா அவர்களே ,நேரம் சரி இல்லை என்று அந்த ஒரு மதத்தினர் மட்டும்தான் கூறுகின்றனர். மற்ற மதத்தினருக்கு அந்த கவலை இல்லை .அவர்கள் மென்மேலும் முன்னேறுவார்கள் .அவர்களுக்கு நிச்சயம் பயனாக இருக்கும்.