அமைதியற்ற நிலையின் மத்தியிலும் எகிப்துக்கு அமெரிக்கா போர் விமானம் வழங்கும்’

worldnews12713bஎகிப்தில் ஒரு அரசியல் அமைதியீனம் தொடருகின்ற போதிலும் அந்த நாட்டுக்கு எஃப்-16 ரக போர் விமானங்களை வழங்குவதற்கான திட்டத்தை அமெரிக்கா தொடரும் என்று மூத்த அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, கடந்த வாரம் இராணுவத்தால் எகிப்திய அதிபர் முஹமட் மோர்சி அவர்கள் பதவியில் இருந்து நீக்கப்பட்ட விவகாரம் குறித்து அமெரிக்கா தொடர்ந்தும் ஆராய்ந்து வரும்.

இஸ்லாமியவாதத் தலைவரான மோர்சி நீக்கப்பட்டது ஒரு இராணுவ சதிப் புரட்சி என்ற முடிவுக்கு அமெரிக்கா வருமானால், எகிப்துக்கான அமெரிக்காவின் பாரிய இராணுவ உதவிகள் சட்டத்தின் அடிப்படையில் வெட்டுக்கு உள்ளாகும்.

மோர்சியை மீண்டும் அதிபராக நியமிக்க வேண்டும் என்று அவரது முஸ்லிம் சகோதரத்துவக் கட்சி போராடி வருகின்றது.

அவர் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக நம்பப்படும் கெய்ரோவில் உள்ள இராணுவ குடியிருப்பு பகுதியில் அந்தக் கட்சியின் ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றார்கள்.

திங்களன்று இராணுவத்துடன் நடந்த மோதல்களில் 50க்கும் அதிகமான முஸ்லிம் சகோதரத்துவ கட்சியின் உறுப்பினர்கள் கொல்லப்பட்டனர். -BBC