ஷா ஆலம் எம்பி காலிட் சமட், அம்னோ மகளிர் பகுதி தகவல் தலைவர் ஹமிடா ஒஸ்மானுக்கு எதிராக தொடுத்திருந்த அவதூறு வழக்கை ஷா ஆலம் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
தாம் பாதிரியார் உடை தரித்ததுபோல் ஒரு மேல்பொறுத்தப்பட்ட படத்தை வெளியிட்டிருந்தார் என்று கூறி ஹமிடாவுக்கு எதிராக காலிட் தொடுத்திருந்த அவ்வழக்கில், படம் இடம்பெற்றிருந்த வலைப்பதிவை காலிட் (இடம்) காண்பிக்கவில்லை என நீதித்துறை ஆணையர் ஹஷிம் ஹம்சா கூறினார்.
செலவுத்தொகையாக காலிட் ரிம20,000 கொடுக்க வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டார்.