இன்று காலை மணி 10.15க்கு, அடையாளம் தெரியாத இளைஞர் ஒருவர், பினாங்கு, பாயான் பாருவில் உள்ள ஸ்டார் நாளேட்டின் தலைமையகத்தைத் தொடர்புகொண்டு அக்கட்டிடத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாகக் கூறினார்.
உடனே போலீசுக்குத் தெரிவிக்கப்பட்டு வெடிகுண்டு நிபுணர்கள் வந்து அந்த 4-மாடி கட்டிடம் முழுக்கத் தேடினார்கள்.
“ஆனால், பிற்பகல் 1.30 வாக்கில் அது புரளி என்பது உறுதியானது”, என பாலேக் பூலாவ் ஓசிபிடி சுப்பிரண்டெண்டன் முகம்மட் ஹத்தா கூறினார்.