இந்தோனேஷியா: சிறையிலிருந்து 150 கைதிகள் தப்பியோட்டம்

worldnews13713bஇந்தோனேஷியாவில் சிறை ஒன்றிலிருந்து தப்பித்த நூற்றைம்பதுக்கும் அதிகமான கைதிகள் இன்னும் பிடிபடாமல் இருந்துவருகின்றனர்.

இந்தக் கைதிகளில் ஐந்து பேர் பயங்கரவாதக் குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனைக்கு உள்ளானவர்கள் ஆவர்.

சுமத்ரா தீவின் வடக்கிலுள்ள இந்த சிறைச்சாலையில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டிருந்ததைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தபோது அந்தக் களேபரத்தில் சிறைச்சாலையின் கட்டுப்பாட்டைக் கையிலெடுத்தக் கைதிகள் அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளனர் என்று இந்தோனேஷிய தேசியக் காவல்துறையின் தலைவர் தெரிவித்துள்ளார்.,

சிறைச்சாலையில் நடந்த வன்முறையில் ஐந்து பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

நூற்றுக்கணக்கான பொலிசாரும் சிப்பாய்களுமாக சேர்ந்து சிறையின் கட்டுப்பாட்டை கைதிகளிடம் இருந்து மீட்டெடுக்க முயன்றிருந்தனர்.

தப்பியோடியவர்களைப் பிடிப்பதற்காக பாதுகாப்புப் படையினர் சுற்றியுள்ள இடங்களில் தேடுதல் வேட்டை நடத்திவருகின்றனர்.

இந்தோனேஷியாவின் சிறைக்கூடங்களில் பொதுவாக அளவுக்கதிகமான கைதிகள் அடைத்துவைக்கப்பட்டிருப்பர் என்றும் அவை மோசமாகவே பராமரிக்கப்பட்டு வருகின்றன என்றும் இந்தோனேஷியாவிலுள்ள செய்தியாளர் கூறுகிறார். -BBC