பொதுமக்கள் எதிர்ப்பு: யுரேனியம் ஆலைத் திட்டத்தைக் கைவிட்டது சீனா

worldnews14713aசீனாவின் தென்பகுதி நகரமாகிய ஜியாங்மென்னில், 37 மில்லியன் யான் மதிப்பீட்டில் (இந்திய மதிப்பில் சுமார் 36 ஆயிரம் கோடி) யுரேனியம் ஆலை ஒன்றை நிறுவத் திட்டமிட்டிருந்தது.

இதன் மூலம் உற்பத்தி செய்யப்படும்  எரிவாயு அந்நாட்டு அணுசக்தித் தேவைகளில் பாதியை நிறைவு செய்யப் போதுமானதாக இருக்கும் என்று எண்ணி அரசு காரியத்தில் இறங்கியது. நிலக்கரியை உபயோகிப்பதற்கு பதிலாக சுத்தமான எரிசக்தியை இதன் மூலம் பெறமுடியும் என்று அரசு நினைத்தது.

ஆனால், பொதுமக்களிடமிருந்து இதற்கு எதிர்ப்பு கிளம்பியது. இணையதளத்தின் மூலம் அமைதி ஊர்வலம் ஒன்றிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. எனினும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் ஜியாங்மென்னின் வீதிகளில் திரண்டனர். பாதுகாப்பிற்கு நின்ற காவல்துறையினரை நோக்கி அணுசக்திக்கு எதிராக என்றும், எங்களுக்கு குழந்தைகள் வேண்டும், அணுகுண்டுகள் அல்ல என்றும் எழுதப்பட்டிருந்த அட்டைகளைத் தாங்கியவண்ணம் கோஷமெழுப்பியபடி, ஊர்வலம் சென்றனர்.

கடந்த 4-ம்தேதி திட்டத்தில் உள்ள ஆபத்து குறித்த ஒரு மதிப்பீட்டு அறிக்கை வெளியிடப்பட்டது. எனவே, ஊர்வலத்திற்குப் பின் அரசு 10 நாட்கள் ஒதுக்கி பொதுமக்களின் கருத்துகளைக் கேட்டு அதன்பின் முடிவெடுக்க முனைந்தது. ஆயினும், இவ்வளவு பெரிய திட்டத்தின் நன்மை, தீமைகள் குறித்து விவாதிக்க இது நீண்டகாலம் என்று மக்கள் கருதினர்.

ஊர்வலம் நடந்த 24 மணி நேரத்திற்குள்ளாகவே உள்ளூர் நிர்வாகம் இத்திட்டத்தை மறுப்பதாக அறிக்கை வெளியிட்டது. சீனாவில் பொதுமக்களின் எதிர்ப்புகள் கடுமையாகத் தடை செய்யப்படலாம். ஆயினும், சில நேரங்களில் அவர்களின் எதிர்ப்பும் பலனைத் தந்துள்ளது. ஆயினும் இத்திட்டத்தின் எதிர்ப்பாளர்கள் சிலர், முழுமையாக இந்தத் திட்டம் தடை செய்யப்பட்டதற்குப் பதிலாக சிறிது காலம் ஒத்திப் போடப்பட்டிருக்கலாம் என்று கருதுகின்றனர்.