பாகிஸ்தானில் கிறிஸ்தவ பெண்கள் நிர்வாணமாக அழைத்துச்செல்லப்பட்டது குறித்து நீதிவிசாரணை

worldnews14713bபாகிஸ்தான் பஞ்சாப் மாகாணம் கசூர் மாவட்ட பட்டோகி பகுதியை சேர்ந்தவர் முஸ்லிம் பணக்காரரார் முகமது முனீர்.

இவருக்கும் அப்பகுதியில் உள்ள மாசி என்ற கிறிஸ்தவ குடும்பத்தை சேர்ந்தவருக்கும் இடையே கடந்த மாதம் மாடு மேய்ப்பதில் தகராறு ஏற்பட்டது. இது தொடர்பாக மாசியின் மகன்கள் முகமது முனீர் குடும்பத்தினருடன் வாய்ச்சண்டையில் ஈடுபட்டனர்.

இச்செய்தி முகமது முனீருக்கு தெரியவர மாசியின் வீட்டுக்கு அடியாட்களுடன் சென்றுள்ளார். இதைபார்த்த மாசி, பயந்து வீட்டை
விட்டு வெளியே ஓடிவிட்டார்.

அப்போது அவர்கள், வீட்டிலிருந்த மாசியின் மகன்கள் 3 பேரின் மனைவிகளை வெளியே இழுத்துபோட்டு கடுமையாக தாக்கியிருக்கின்றனர்.

பின்னர் அவர்கள் மூன்று பேரையும் நிர்வாணமாக்கி வீதியில் இழுத்து சென்றுள்ளனர். குறிப்பிட்ட தூரம் வீதியில் இழுத்துசென்ற பிறகு, அவர்கள் மூன்று பேரையும் விடுவித்து இருக்கின்றனர். இதுகுறித்து போலீசாரிடம் சொன்னால், கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று அப்போது முனீர் மிரட்டியுள்ளார்.

இந்த விவகாரம் குறித்து ஆசிய மனித உரிமை அமைப்பில் பேசப்பட்டு அறிக்கை வெளியிடப்பட்டது. பின்னர் இது குறித்து லாகூர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதுகுறித்து கசூர் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றங்கள் இரு வாரங்களுக்குள் அறிக்கை சமர்பிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.