உள்துறை அமைச்சர் அகமட் ஸாஹிட் ஹமிடி தம்மைத் தாக்கியதாக கூறப்பட்டது தொடர்பில் தாம் சமர்பித்திருந்த இழப்பீட்டுக் கோரிக்கைகளை (claim for damages) மீட்டுக் கொள்ள வணிகரான அகமட் பாஸ்லி அப்துல்லா ஒப்புக் கொண்டுள்ளார்.
அதற்கு ஈடாக அகமட் பாஸ்லி மீது தாம் போட்டிருந்த கோரிக்கையை மீட்டுக் கொள்ள அகமட் ஸாஹிட் இணங்கினார்.
ஷா அலாம் உயர் நீதிமன்றத்தில் இன்று ஒரு மணி நேரத்துக்கு மேல் விவாதம் நடத்திய பின்னர் இரு தரப்புக்களும் இணக்கம் கண்டன.
அகமட் ஸாஹிட் சார்பில் வழக்குரைஞர் சம்சுல் பாஹ்ரெய்னும் அகமஸ் பாஸ்லி சார்பில் கர்பால் சிங்-கும் ஆஜரானார்கள்.
2007ம் ஆண்டு அகமட் ஸாஹிட்டுக்கு எதிராக அகமட் பாஸ்லி வழக்குத்
தொடுத்தார்.
அந்த வழக்கை தள்ளுபடி செய்யுமாறு அகமட் ஸாஹிட் கொடுத்த விண்ணப்பத்தை கூட்டரசு நீதிமன்றம் மறுத்து அந்த விவகாரம் விசாரணைக்குச் செல்ல வேண்டும் என கடந்த மாதம் ஆணையிட்டது.
அந்த வழக்கு விசாரிக்கப்படுவதற்கு அடுத்த மாதம் நிர்ணயிக்கப்பட்டிருந்த தேதிகளைக் காலி செய்யவும் இரண்டு தரப்புக்களும் இணங்கின.