பாஸ்: சாப்ரிக்கும் ராபிஸிக்கும் இடையில் விவாதம் நடக்க வேண்டும்

rafizi shaberryகோலா பெசுட்டில் விவாதம் நடத்த வருமாறு பாஸ் கட்சி அம்னோவுக்குச் சவால்  விடுத்துள்ளது.

அந்த விவாதத்தில் பாஸ் கட்சியையும் எதிர்த்தரப்பையும் பிரதிநிதிக்க தாம்  பிகேஆர் வியூக இயக்குநர் ராபிஸி இஸ்மாயிலை அழைக்கப் போவதாகவும்  அம்னோ/பிஎன் சார்பில் தொடர்பு, பல்லூடக அமைச்சரும் அம்னோ உச்ச மன்ற  உறுப்பினருமான அகமட் சாப்ரி சிக் அதில் பங்கு கொள்ளலாம் என்றும் பாஸ்  உதவித் தலைவர் ஹுசாம் மூசா கூறியிருக்கிறார்.

இன்றிரவு  tarawih தொழுகைக்குப் பின்னர் அந்த விவாதம் நடத்தப்படலாம் என்றும்  ஹுசாம் மேலும் யோசனை தெரிவித்தார்.

“அகமட் சாப்ரி பங்கு கொள்வதால் ஆர்டிஎம் வழி அந்த விவாதம் நேரடியாக  ஒளிபரப்பாகும் என்றும் நம்பலாம்,” என அவர் சொன்னார்.

– பெர்னாமா

TAGS: