பெர்சே, பொதுத் தேர்தலில் நிகழ்ந்ததாகக் கூறப்படும் தேர்தல் மோசடிகளை விசாரணை செய்யும் மக்கள் பஞ்சாயத்தின் உறுப்பினர் பட்டியல் இறுதிசெய்யப்பட்டு வருகிறது.
இதனை மலேசியாகினியிடம் தெரிவித்த பெர்சே இயக்கக்குழு உறுப்பினர் எண்ட்ரு கூ, ஜூலை 25-க்குள் அவர்களின் பெயர்களை அறிவிக்க முடியும் என்று நம்புகிறார்.
“அது இறுதிசெய்யப்பட்டதும் அறிவிப்பு செய்வோம். அனேகமாக ஜூலை இறுதி வாக்கில் அறிவிக்கப்படும்”, என்றாரவர்.
செப்டம்பரில் விசாரணை தொடங்கும் என்பதால் ஜூலைக்குள் பஞ்சாயத்தை அமைக்க அது இலக்கு நிர்ணயித்துக் கொண்டிருக்கிறது.