ஆஸ்திரேலியாவுக்கு படகுகளில் வந்து தஞ்சம் கோரும் எவருக்கு இனிமேல் ஆஸ்திரேலியாவில் அகதிகளாக வந்து குடியேற அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று ஆஸ்திரேலியப் பிரதமர் கெவின் ரட் கூறியிருக்கிறார்.
பொதுத்தேர்தலுக்கு முன்னர் குடிவரவுக் கொள்கையை சீர்திருத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக இதை அறிவித்த கெவின் ருட், பாப்யுவா நியூகினியா அரசுடன் இது குறித்து கையெழுத்தாகியிருக்கும் ஒரு உடன்பாட்டின்படி, ஆஸ்திரேலியாவுக்கு வரும் தஞ்சம் கோரிகள் அந்தத் தீவுக்கு அனுப்பப்பட்டு, அவர்கள் கோரிக்கை மதிப்பிடப்படும் என்றார்.
உண்மையான அகதிகள் பாப்யுவா நியுகினியாவில் தங்க அனுமதிக்கப்படுவர் ஆனால் தஞ்ச விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டவர்கள் திரும்பவும் அவர்களின் சொந்த நாடுகளுக்கோ அல்லது ஒரு மூன்றாம் நாட்டுக்கோ அனுப்பப்படுவர் என்று பிரதமர் கூறினார்.
ஆஸ்திரேலியாவுக்கு ஒரு பலமான, துடிப்பான எல்லைப்பாதுகாப்பு அமைப்பு இருப்பதை உறுதி செய்யவேண்டிய பொறுப்பு தனக்கு இருப்பதாக பிரதமர் ரட் கூறினார். -BBC