ஆகவே கடத்தல்காரர்கள் யாத்ரைக்காக பணம் கேட்டனரா ?

news21713a“சமயப் பற்றுடைய அந்த கிரிமினல்கள் இங் குடும்பத்திடமிருந்து ஏன் 3,000  ரிங்கிட் பிணைப் பணம் பெற முயற்சி செய்தனர் என்பதை ஐஜிபி விளக்குவாரா ?  அவர்கள் யாத்ரை செல்லத் திட்டமிட்டுள்ளனரா ?”

அந்த ‘hina Islam’ கடத்தல் அல்விவியுடன் தொடர்புடையது என்கிறார் ஐஜிபி  (தேசியப் போலீஸ் படைத் தலைவர்)

ஒடின்: ஐஜிபி-யாக இருப்பதற்கு காலித் அபு பாக்கார் முற்றிலும் தகுதியற்றவர்  என்பது நமக்குத் தெரியும். சொந்த நன்மைக்காக அவர் பொய் சொல்வதோடு  உண்மை நிலைகளையும் திரித்துக் கூறுகிறார்.

ஆனால் இங் முன் டாட்-டை கடத்தி பணம் பறிக்க முயன்றவர்கள் விசாரணை  முடியும் வரையில் பொது நன்மைக்காக சிறையில் வைக்கப்பட வேண்டும் என  நீதிபதி முர்டாஸாடி தீர்ப்பு வழங்கியுள்ளார்.

அந்தக் கிரிமினல்கள் சமூகத்துக்கு ஆபத்தானவர்கள். அவர்கள் கடத்தல், பணம்  பறித்தல் ஆகிய இரண்டு கடுமையான குற்றங்களைப் புரிந்துள்ளனர். அவர்கள்  போதைப் பித்தர்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. ஆனால் அவர்கள் தங்கள்  சமயத்தை தற்காத்த முஸ்லிம்கள் என்பதால் நிச்சயம் நடவடிக்கை ஏதும்  எடுக்கப்பட மாட்டாது.

ஜெரொனிமோ: அது சமயப் பிரச்னை எனச் சொல்வதால் ஒரு தனிநபருக்குத்  தீங்கிழைப்பது சரியாகி விடுமா ? இது சர்ச்சைக்குரிய பிரச்னைகள் எழும் போது  முஸ்லிம்கள் முஸ்லிம் அல்லாதாரைத் தாக்குவதற்கு வெற்றுக் காசோலையைக்  கொடுப்பதற்கு சமமில்லையா ?

போலே லாண்ட்: கடத்தப்பட்டவருக்கும் அல்விவி-க்கும் (அல்வின் தான், விவியன்  லீ) என சம்பந்தம் ? போலீஸ் தலைவருடைய கருத்து மிகவும் ஆபத்தானது.

அடுத்த முறை ஒரு முஸ்லிம், முஸ்லிம் அல்லாத ஒருவருக்கு தீங்கிழைத்தால்  அவிவியின் முகநூல் பதிவுக்குப் பழி வாங்குவதாக அவர் எளிதாகச் சொல்லி  விடலாம்.

அந்த நிலையை பயன்படுத்திக் கொள்ளும் கிரிமினல்களை நான் குற்றம் சொல்ல  மாட்டேன். அத்தகைய கிரிமினல் நடவடிக்கைகளை வெளிப்படையாக ஆதரிக்கும்  அதிகாரத்தில் உள்ள முட்டாள்களையே நான் நிந்திப்பேன்.

துணிச்சலான மலேசியன்: இங் கடத்தலுக்கும் அல்விவிக்கும் உள்ள பிணைப்பு  குறித்து தாம் விடுத்த அறிக்கையை ஐஜிபி நிச்சயம் நியாயப்படுத்த வேண்டும்.  கிரிமினல்கள் அதனைப் பயன்படுத்துவதற்கு ஐஜிபி வாய்ப்பளித்து விட்டார்.

ஐஜிபி அம்னோ கைப்பாவை. அவர் அரச மலேசியப் போலீஸ் படைக்கு
அவமானத்தை தந்துள்ளார். போதைப் பித்தர்களும் பணம் பறிப்பவர்களும்  கடத்தல்காரர்களும் இப்போது இஸ்லாத்தின் ஹீரோக்களாகி விட்டனர். ஐஜிபி-க்கு  நன்றி.

Fiat Justitia, Ruat Caelum: அந்த கிரிமினல்கள் சமயப் பற்றுதலால் இங்-கை  கடத்தினர் எனச் சொல்வதாகத் தெரிகின்றது.

சமயப் பற்றுடைய அந்த கிரிமினல்கள் இங் குடும்பத்திடமிருந்து ஏன் 3,000  ரிங்கிட் பிணைப் பணம் பெற முயற்சி செய்தனர் என்பதை ஐஜிபி விளக்குவாரா ?  அவர்கள் யாத்ரை செல்லத் திட்டமிட்டுள்ளனரா ?

வீரா: தங்கள் சமயத்தைத் தற்காப்பதற்காக திருடியதால் அந்தக் கடத்தல்காரர்கள்  விடுவிக்கப்பட மாட்டார்கள் என நான் நம்புகிறேன். இந்த நாட்டில் பல  வினோதமான விஷயங்கள் நிகழ்கின்றன.

பாலியல் வல்லுறவில் சம்பந்தப்பட்ட ஒருவர், பாதிக்கப்பட்ட இளம் வயது  பெண்ணை திருமணம் செய்து கொள்ள முடியும். நல்ல எதிர்காலத்தைக் கொண்ட  ஒருவர் பாலியல் வல்லுறவுக் குற்றச்சாட்டுக்கு ஜெயில் தண்டனையிலிருந்து
தப்பிக்கவும் முடியும்.

TAGS: