“பிரிவு 9ஏ அரசாங்கம் ஏமாற்ற உதவுகின்றது என இசி சொல்லி விடலாம்”

news21713b“வான் அகமட் அவர்களே தேர்தல்களை நியாயமாகவும் நேர்மையாகவும்  நடத்துவது தான் உங்கள் வேலை. கூடிய விரைவில் அதனை முடிப்பதல்ல”

இசி: தேர்தல் தாமதங்களைத் தடுக்க பிரிவு 9ஏ அவசியம்

ஹலோ: தேர்தல் ஆணைய (இசி) துணைத் தலைவர் வான் அகமட் வான் ஒமார்  அபத்தமாகப் பேசுகிறார்.

1999 தேர்தலைத் தொடர்ந்து லிக்காஸ் தொகுதியில் தொடுக்கப்பட்ட நீதிமன்ற  வழக்கிற்குப் பின்னர் பிரிவு 9ஏ கொண்டு வரப்பட்டது. 1957 தொடக்கம் அது  வரை அந்தப் பிரிவு இல்லாமலேயே தேர்தல்கள் நடந்துள்ளன.

ஆகவே அந்தப் பிரிவு இல்லாமல் தேர்தலை நடத்த முடியாது என எப்படிச்  சொல்ல முடியும் ?

ஏரியஸ்46: வாக்காளர் பட்டியல் எப்படி இருந்தாலும் தேர்தல்கள் 60 நாட்களுக்குள்  நடத்தப்பட வேண்டும் என்பதால் அதனை யாரும் எதிர்க்கக் கூடாது என வான்  அகமட் சொல்ல வருகிறார்.

அதாவது அந்தப் பட்டியலில் அடையாளம் தெரியாத, கண்டு பிடிக்க முடியாத,  கள்ளக் குடியேறிகளான வாக்காளர்கள் இருந்தாலும் பரவாயில்லை. 60  நாட்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

வான் அகமட் சொல்லிக் கொள்வது போல வாக்காளர் பட்டியல் தூய்மையானதாக  இருந்தால் அவர் ஏன் அந்த பிரிவு 9ஏ-யை பிடித்துக் கொள்ள வேண்டும் ?  அதற்கு அவருக்கு மட்டுமே தெரிந்த சில காரணங்களும் இருக்கலாம்.

முட்டாள்களே அத்தகைய பதில்களைத் தருவார்கள். பிரிவு 9ஏ அரசாங்கம்  ஏமாற்ற உதவுகின்றது என இசி சொல்லி விடலாம்

கிம் குவேக்: லிக்காஸ் தொகுதியில் ஆயிரக்கணக்கான ஆவி வாக்காளர்கள்  இருப்பதை உறுதி செய்த லிக்காஸ் தீர்ப்புக்குப் பின்னர் அந்த பிரிவு 9ஏ  இயற்றப்பட்டது.

சட்ட நடவடிக்கையில் அத்தகைய ஆவி வாக்காளர்கள் பட்டியலிலிருந்து  நீக்கப்படுவதைத் தடுக்கவே அது உருவாக்கப்பட்டது.

இது போன்ற ஜனநாயகத்துக்குப் புறம்பான சட்டம் ஏதும் உலகில் இல்லை. அது  நமது அரசமைப்பை மீறுகின்றது. அது நீண்ட காலத்துக்கு முன்பே நீதித் துறை  மறு ஆய்வு மூலம் செல்லாது என அறிவிக்கப்பட்டிருக்க வேண்டும்.

Flyingeagle: ஹலோ வான் அகமட் அவர்களே நீங்கள் ‘இறுதித் தேதி’ என்ற  சொல்லை கேள்விப்பட்டது இல்லையா ?

நீங்கள் தூய்மையாகவும் நியாயமாகவும் வேலை செய்ய வேண்டும். அவ்வாறு  செய்ய விருப்பம் இல்லை என்றால் உள்துறை அமைச்சர் அகமட் ஸாஹிட் ஹமிடி  சொல்வதைப் போல உங்களுடைய வாதங்கள் ஏற்றுக் கொள்ளப்படும் இன்னொரு  நாட்டுக்கு குடியேறி விடுங்கள்.

அனோனிம்: வான் அகமட் அவர்களே தேர்தல்களை நியாயமாகவும் நேர்மையாகவும் நடத்துவது தான் உங்கள் வேலை. கூடிய விரைவில் அதனை  முடிப்பதல்ல.

TAGS: