பிரான்ஸ் தலைநகர் பாரிஸின் புறநகர்ப் பகுதிகளில் இரண்டாவது இரவும் வன்முறைகள் நடந்துள்ளன.
பிரான்ஸின் பொது இடங்களில் முஸ்லிம் பெண்கள் முகத்திரை- புர்கா அங்கி அணிவதற்கு உள்ள தடையை எதிர்த்து நடந்துவரும் போராட்டங்களிலேயே இந்தக் கலவரங்கள் நடந்துள்ளன.
கார்களும் பஸ் தரிப்பிடங்களும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன.
போலிசார் கண்ணீர்ப்புகை மற்றும் தடியடிப் பிரயோகம் நடத்தி போராட்டக்காரர்களைக் கலைத்துவருகின்றனர்.
கடந்த வியாழக்கிழமை, முகத்தை முழுமையாக மூடி புர்கா அணிந்திருந்த பெண்ணொருவரை போலிசார் எச்சரித்தபோது, அந்தப் பெண்ணின் கணவனான இளைஞர் போலிசாரின் கழுத்தைப் பிடித்துள்ளார். முகத்திரையை அகற்றுமாறு தனது மனைவிக்கு உத்தரவிடப்பட்டதை அந்த இளைஞர் எதிர்த்துள்ளார்.
அந்த இளைஞரை போலிசார் கைதுசெய்ததை அடுத்தே போராட்டம் வெடித்துள்ளது.
இனச் சிறுபான்மை மக்கள் செறிவாக வாழும் பாரிஸின் புறநகர்ப் பகுதிகளில் பெருமளவு கொந்தளிப்பு நிலை காணப்படுவதாக பிபிசி செய்தியாளர் தெரிவித்தார். -BBC