அம்னோ மகளிர் தலைவி ஷரிசாட் அப்துல் ஜலில், கட்சிக்குள்ளேயே எதிர்ப்பை எதிர்நோக்குவதுபோல் தெரிகிறது. சிலர், நேசனல் ஃபீட்லோட்கார்ப்பரேசன் (என்எப்சி) விவகாரம் விடாமல் அவரைத் துரத்துகிறது எனக் கருதுகிறார்கள்.
முன்பு ஷரிசாட்டின் ஆதரவாளர்களாக இருந்தவர்கள் இப்போது அவர் பதவி இறங்க வேண்டும் என்று விரும்புகிறார்கள் என பத்து பாஹாட் அம்னோ மகளிர் தலைவி ஹஸ்லிசா அப்துல்லா கூறினார்.
“அதற்கு என்எப்சி விவகாரம்தான் காரணம்”, என அவர் கூறியதாக பெரித்தா ஹரியான் அறிவித்துள்ளது.