சிறு வயது முதல் வழக்குரைஞர் ஆக விரும்பிய மாணவனுக்கு பொதுப் பல்கலைக்கழகம் ஒன்றில் சட்டம் பயில வாய்ப்பு கிடைத்ததும் அகமகிழ்ந்து போனான்.
ஆனால், மகிழ்ச்சி நீடிக்கவில்லை. பிறகுதான் தெரிய வந்தது யுனிவர்சிடி சுல்தான் சைனல் அபிடின்(UniSZA) வழங்கும் சட்டக்கல்வி மலேசியாவில் அங்கீகரிக்கப்படுவதில்லை என்பது. அதிர்ந்து போனான்.
“பொதுப் பல்கலைக்கழகம் வழங்கும் பட்டப் படிப்புக்கு அங்கீகாரம் இல்லை என்பதை நினைத்துப் பார்க்க முடிகிறதா? நம்ப முடியாத கதையாக இருக்கிறதே”, என்று வாய்விட்டுப் புலம்புகிறார் அம்மாணவனின் தாயார்.
கடந்த வெள்ளிக்கிழமை, மலேசிய வழக்குரைஞர் மன்றம், உள்நாட்டில் ஐந்து உயர்கல்விக் கூடங்கள் வழங்கும் சட்டக் கல்விக்கு அங்கீகாரம் இல்லை என்பதை மாணவர்களுக்கு நினைவுறுத்தியபோதுதான் இது பற்றி அவர்களுக்குத் தெரிய வந்தது.
HELP University College, Management and Science University (MSU), Taylor’s University, Universiti Sains Islam Malaysia (USIM), UniSZA ஆகியவையே அந்த ஐந்துமாகும்.
இதில் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் இந்திய மாணவர்களாகத் தான் இருப்பார்கள். அதிகம் மலாய் மாணவர்கள் என்றால் நிச்சயம் அது அங்கிகரீக்கப்பட்ட பல்கலைக்கழங்கள் ஆகத்தான் இருக்கும். ஆனால் ஆச்சரியம். அங்கிகரீக்கப்படாத இந்தப் பல்கலைக்கழகங்கள் ஏகப்பட்ட விளம்பரங்கள் தருகின்றன. அதுவும் அரசாங்கத்தின் ஆசியுடன்!
அரசாங்கத்தில்தான் வாய்ப்பில்லை தமிழ் மாணவர்கள் என்னதான் செய்வார்கள் எப்பிடியாவது படித்தே ஆகவேண்டும் என்ற கட்டாயம் தனியார் கல்லூரிகளும் இப்படி மோசம் செய்யலாமா??
அங்கீகாரம் இல்லாத படிப்புக்கு இங்கு இடம் கொடுத்தது யார்???
திறமைமிக்க மாணவர்களே.. மேற்கல்வியை தேர்வு செய்வதற்கு முன் அந்த படிப்பு அங்கீகாரம் பெற்றதா என்பதை நன்கு விசாரித்துவிட்டு பிறகு கல்வியை மேற்கொள்ளுங்கள் அன்பரே!!!!!!