அரசாங்கம், நாடு திரும்பும் நிபுணர்கள் திட்டத்தின்கீழ் மலேசியாவுக்கு திரும்பிவந்து இஸ்கண்டர் மேம்பாட்டு மண்டலத்தில் பணிபுரியும் மலேசியர்களுக்கும் வெளிநாட்டு வல்லுனர்களுக்கும் மட்டும் 15 விழுக்காடு வருமான வரிச் சலுகை வழங்குவதை பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங் கண்டித்தார்.
அதை “ஒரு நாடு, இரண்டு முறைகள்” என்றவர் வருணித்தார்.
“ஏன் சாபா, சரவாக்குக்கும் மற்ற மாநிலங்களுக்கும் அதை வழங்கவில்லை? அம்மாநிலங்களுக்கு வல்லுனர்கள் தேவைப்படுத்த மாட்டார்களா?”, என்று டிஏபி தலைமைச் செயலாளருமான லிம் வினவினார்.
செம்பருத்தியும் ஒரு வகையிலே பயப்புடுறாங்க! ஏன்னா நான் எதாவது கருத்தை தைரியமாக எழுதினால் அதை முழுமையா வெளிட மாட்டராங்க! அப்புறம் எதுக்கு, நீங்கள் பதிவு செய்யும் கருத்துக்கு நீங்களே முழு பொறுப்பாளி என்று அறிவிப்பு செய்து இருக்கிறீர்கள்? வேணும்னா அடுத்தத் தடவை நான் தைரியமா என் சொந்தப் பெயர், அடையாள அட்டை எண் மற்றும் முகவரியைக் கொண்டு எழுதுறேன் சரியா…!
அடேய்யப்பா இதையும் மாற்றி எழுதி எனக்கு சாட்டை அடி கொடுத்து இருக்காங்களே! என் பெயர் முகவரி இல்லாமலேயே என்னை நீங்கள் கண்டு பிடிக்க முடியும் என்பது எனக்குத் தெரியும் இருந்தாலும் சும்மா ஒரு உதார் விட்டன்! விடுங்கப்பா சாமி நான் எப்பவும் போலவே Mr.கை குந்தாவாகவே எழுதறன்…..
என்ன செம்பருத்தி அவர்களே! Mr.கைக்குந்தா அவர்களின் கருத்தை ஏற்க முடியுமா?