பிஎன் வேட்பாளர் தெங்கு ஸைஹான் சே கு, இன்று காலை கோலா பெசுட் இடைத் தேர்தலில் வாக்களிக்கச் சென்றபோது பூர்த்தி செய்யப்பட்ட வாக்குச் சீட்டைப் பலருக்கும் காண்பித்தது முறையற்றது எனத் தேர்தல் ஆணையம் (இசி) கூறியது.
“ஒவ்வொரு வாக்கும் இரகசியமானது”, என்று இசி தலைவர் அப்துல் அசீஸ் முகம்மட் யூசுப் கூறினார். தெங்கு ஸைனான் தமக்குத் தாமேதான் வாக்களித்துக் கொள்வார் என்பது வெளிப்படை என்றாலும் அதை விளம்பரப்படுத்திக் கொண்டிருக்கக் கூடாது
இதனிடையே மாலை 5 மணிக்கு வாக்களிப்பு முடிவுக்கு வந்தது. மொத்தம் 14,108 பேர் கிட்டத்தட்ட 80 விழுக்காட்டினர் வாக்களித்துள்ளனர்.
தேர்தல் முடிவு இரவு 10 மணிக்குமேல்தான் தெரிய வரும் எதிர்பார்க்கப்படுகிறது.