மாட்ரிட்: ஸ்பெயின் நாட்டில் ரயில் தடம் புரண்ட விபத்தில் 60 பேர் வரை பலியாயினர். 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
ஸ்பெயின்நாட்டில் புகழ் பெற்ற திருவிழாவான புனித ஜேம்ஸ் ஆலய விழாவில் கலந்து கொள்வதற்காக சாண்டியாகோ நகருக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ரயில் மூலம் பயணம் செய்தனர்.
ரயிலில் வழக்கத்திற்கு மாறாக அதிகமான அளவில் கூட்டம் இருந்துள்ளது. நகரின் அருகே ரயில் வேகமாக சென்று கொண்டிருந்த நிலையி்ல் வளைவு ஒன்றில் திரும்பும் போது எதிர்பாரத விதமாக ரயில் தடம்புரண்டது.
இவ்விபத்தில் ரயில் பெட்டிகள் ஒன்றின் மீது ஒன்று ஏறி நி்ன்றது. மேலும் பெட்டிகள் தீ பிடித்து எரிந்தது. இத்தீவபத்து மற்றும் பெட்டி இடிபாடுகளில் சிக்கி குறைந்த பட்சம் 60 பேர் வரை பலியாயினர் .மேலும் 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
கடந்த 2004-ம் ஆண்டு மாட்ரிட் ரயில் நிலையத்தில் நடத்தப்பட்ட தீவிரவாத இயக்கத்தினரால் நடத்தப்பட்ட தாக்குதலில் சுமார் 191 பேர் கொல்லப்பட்டனர்.மேலும் கடந்த 25 ஆண்டுகளில் ஐரோப்பிய கண்டத்தில் நடைபெற்ற மோசமான விபத்துக்களில் ஒன்றாக இது கருதப்படுகிறது.
On Wednesday in Spain, a passenger train carrying 247 people between the capital of Madrid and the northern Spanish city of Ferrol, crashed killing at least 78 and leaving more than 140 injured. It is the most devastating train accident in recent Spanish history. At the time of the accident, it has been reported that the train was traveling at 118 mph, twice the speed limit of the curve it was passing.