இத்தாலியில், ரோமிலும் அதனை அண்டிய பகுதிகளிலும் மாஃபியா குற்றக்கும்பல்களை இலக்குவைத்து இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய தேடுதல் வேட்டையை போலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
ஹெலிகொப்டர்களும் கடல் ரோந்துப் படகுகளும் புடைசூழ நூற்றுக்கணக்கான போலிஸ் அதிகாரிகளும் இந்த படை நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.
50க்கும் அதிகமானோர் இதுவரை கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
தலைநகரிலும் கரையோர நகரான ஓஸ்டியாவிலும் சட்டவிரோதமாக போதைப் பொருள் வியாபாரங்களை இயக்கிவரும் முக்கிய சந்தேகநபர்களும் கைதுசெய்யப்பட்டுள்ளவர்களில் அடங்குகின்றனர்.
இரண்டு முக்கிய குற்றக் கும்பல்களின் முன்னணி புள்ளிகளும் போலிசாரிடம் சிக்கியுள்ளனர்.
தெற்கு இத்தாலியில் நடந்துள்ள இரண்டாவது படைநடவடிக்கையின்போது காலாப்ரியா பிராந்தியத்தில் பலர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
ஐரோப்பாவில் தேடப்பட்டுவந்த முக்கிய மாஃபியா தலைவனான ரொபேர்டோ பன்னுன்ஸி கம்போடியாவில் இந்த மாதத்தின் ஆரம்பத்தில் பிடிபட்டாமை குறிப்பிடத்தக்கது.
65 வயதான ரொபேர்டோ பன்னுன்ஸி, உலகின் மிகப்பெரிய கொகெய்ன் போதைப் பொருள் இறக்குமதியாளன் என்று இத்தாலி அதிகாரிகள் கூறுகி்ன்றனர். -BBC