தப்பியோடிய போலீஸ் அதிகாரி சரண், நாளை குற்றம்சாட்டப்படுவார்

hariபோலீஸ் காவலில்  இறந்துபோன என். தர்மேந்திரன் வழக்கில் சம்பந்தமுள்ளவர் எனச் சந்தேகிக்கப்படும் நாலாவது நபர் சரணடைந்துள்ளார்.

ஹரி கிருஷ்ணன், இன்று காலை மணி 10.30க்கு புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தில் சரணடைந்தார்.

நாளை அவர்  நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவார்  என  இன்ஸ்பெக்டர்-ஜெனரல் அப் போலீஸ் காலிட் அபு பக்கார் கூறினார்.

சரணடைவதற்குமுன் ஹரிகிருஷ்ணன்,  தர்மேந்திரன் மரணம் தொடர்பில் தம்மீதும் குற்றம் சாட்டப்படலாம் என அவரின் குடும்பத்தாரிடம் தெரிவித்துள்ளார்.