தூக்கத்தை கெடுக்கும் முழு நிலவு: சுவிஸ் விஞ்ஞானிகள் தகவல்

full_moon_001சுவிஸ் விஞ்ஞானிகளால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில் நிம்மதியான தூக்கத்தை பாதிக்கும் ஆற்றல் பூரண சந்திரனுக்கு உண்டு என்ற தகவல் வெளியாகியுள்ளது.

பஸல் பல்கலைக்கழகம் உட்பட சில ஆராய்ச்சி நிறுவனங்கள் இணைந்து மேற்கொண்ட இந்த ஆய்விற்காக 33 நபர்களின் தூக்கம் தொடர்பான விபரங்களை பகுப்பாய்வு செய்துள்ளனர்.

இவர்கள் அனைவரும் புகைத்தலோ அல்லது மதுபானம் அருந்தும் பழக்கமோ அற்றவர்கள்.

இதில் 17 பேர் 21 தொடக்கம் 31 வரையானவர்கள், எஞ்சிய 16 பேரும் 57 தொடக்கம் 74 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பூரண சந்திரன் தோன்றியபோது இவர்கள் தமது தூக்கத்தில் இடர்களை எதிர்நோக்கியுள்ளனர், அவர்கள் தூங்கிய பகுதியை இருட்டாக்கியபோது நன்றாக தூங்கியுள்ளனர்.

ஆய்வின் முடிவில் உடலின் செயற்பாட்டை ஒழுங்குமுறையாக மேற்கொள்ள உதவும் மெலடோனின் எனும் ஹோர்மோன் உற்பத்தி பாதிக்கப்படுவதனாலேயே தூக்கமின்மை ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.