ஈராக்கில் தொடர்ச்சியாக 12 குண்டுகள் வெடித்தது: 51 பேர் உடல் சிதறி பலி

worldnews30713aஇராக் தலைநகர் பாக்தாத்தில் நடந்துள்ள 8 கார்க்குண்டுத் தாக்குதல்களில் குறைந்தது 51 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 200க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

பெரும்பாலும் ஷியா மக்கள் குடியிருக்கும் பிரதேசங்களிலேயே இந்தத் தாக்குதல்கள் நடந்துள்ளன.

2003-ம் ஆண்டின் இராக் மீதான படையெடுப்புக்குப் பின்னர், மோசமான குண்டுத் தாக்குதல்கள் இந்த ஆண்டில் நடந்துவருகின்றன.

உள்நாட்டில் கிளர்ச்சி உச்சகட்டத்தை அடைந்திருந்த 2006-2007காலப்பகுதியிலிருந்து தற்போது நாடு முழுவதிலும் வன்முறைகள் குறைந்துவந்துள்ள போதிலும் குண்டுத் தாக்குதல்கள் தொடர்ந்தும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன.

இந்த ஜூலை மாதத்தில் மட்டும் இராக்கில் 700க்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

கார் தரிப்பிடங்களிலும் சந்தைகளிலும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்களிலிருந்து இன்று இந்தக் குண்டுகள் வெடித்துள்ளன.

கிழக்கே, ஷியாக்களின் சாதர் நகரிலேயே மிக மோசமான தாக்குதல் நடந்துள்ளது. -BBC