அமெரிக்காவில் கலிஃபோர்னியாவைச் சேர்ந்த மாணவன் ஒருவனுக்கு 40 லட்சம் டாலர்களுக்கும் அதிக பணத்தை இழப்பீடாகக் கொடுப்பதற்கு அமெரிக்காவின் நீதி அமலாக்கத்துறை ஒப்புக்கொண்டுள்ளது.
கைகள் விலங்கிடப்பட்ட நிலையில், போலிஸ் சிறைக்கூடத்துக்குள் தடுத்து வைக்கப்பட்டிருந்த இந்த இளைஞனை அதிகாரிகள் முழுமையாக மறந்துபோன நிலையில் கைவிட்டிருந்தனர்.
இதனால் நான்கு நாட்களாக தண்ணீரும் உணவுமில்லாமல் தவித்த இளைஞன் தனது சிறுநீரையே குடிக்க நேர்ந்துள்ளது.
போதைப்பொருள் தேடலின்போதே இந்த இளைஞனையும் போலிஸார் பிடித்துச் சென்றிருந்தனர்.
ஆனால், அவர் கைது செய்யப்படவும் இல்லை. குற்றச்சாட்டுக்கள் எதுவும் அவர்மீது பதிவு செய்யப்படவும் இல்லை.
ஆனால் கைவிலங்கிடப்பட்ட நிலையிலேயே சிறைக்கூடத்தில் வைக்கப்பட்டிருந்த அவரை எவருமே கவனிக்கவில்லை.
தான் சுவரில் உதைத்து கத்தி கூக்குரலிட்டதாக அந்த இளைஞன் கூறுகிறார்.
4 நாட்களாக சிறைக்கூடத்தில் நீரின்றி தவித்த இளைஞன் பின்னர் 5 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற நேர்ந்தது. இதில் 3 நாட்கள் தீவிர கண்காணிப்பு பிரிவிலும் இருந்துதான் அவர் மீண்டுள்ளார்.
இந்த சம்பவத்தால் வருத்தமடைந்துள்ளதாக அமெரிக்க போதைப் பொருள் தடுப்பு போலிசார் கூறியுள்ளனர். -BBC


























உண்மையை ஒப்புக்கொள்ளும் போலீசார் அமெரிக்காவில் மட்டும்தான் இருக்கிறார்களா ? இங்கே தகவலை வெளியிட்டவருக்கு தேச நிந்தனை சட்டம் உடனே பாய்ந்துவிடும் !