ஷா அலாம் எம்பி-க்கு ரிம60 ஆயிரம் கொடுக்குமாறு உத்துசானுக்கு உத்தரவு

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அம்னோவுக்குச் சொந்தமான உத்துசான் மலேசியாவின் முதல் பக்கத்தில் வெளியான கட்டுரை ஒன்றில் ஷா அலாம் எம்பி காலித் சாமாட்  மீது அவதூறு கூறியதற்காக அவருக்கு 60,000 ரிங்கிட் கொடுக்குமாறு அந்த நாளேட்டின் ஆசிரியருக்கும் வெளியீட்டாளருக்கும் ஆணையிடப்பட்டுள்ளது.

கோலாலம்பூரில் இன்று உயர் நீதிமன்ற நீதிபதி டாக்டர் பிரசாத் சந்தோஷம் அப்ரஹாம் அந்தத் தொகையை நிர்ணயம் செய்தார்.

பண்டார் பாரு எம்பி சுல்கிப்லி நோர்டினுடைய வலைப்பதிவிலிருந்து எடுக்கப்பட்ட, 2009ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி வெளியிடப்பட்ட கட்டுரை தொடர்பில் உத்துசான் மலேசியாவும் அதன் வெளியீட்டாளரான உத்துசான் மலேசியா (எம்) சென் பெர்ஹாட்டும் இழப்பீடு கொடுக்க வேண்டும் என நீதிபதி பிரசாத் கடந்த செப்டம்பர் 30ம் தேதி தீர்ப்பளித்தார்.

சுல்கிப்லி தாடி வைத்த மனிதரைச் சாடுகிறார் ( Zulkifli bidas Pak Janggut ) என்னும் தலைப்பில் உத்துசான் முதல் பக்கத்தில் செய்தி வெளியிட்டிருந்தது.

உத்துசான் மலேசியா- மிங்குவான் மலேசியா குழும தலைமை ஆசிரியர் அஜிஸ் இஷாக், உத்துசான் மலேசியா- மிங்குவான் மலேசியா வெளியீட்டாளரான ஆகியோரை பிரதிவாதிகளாக காலித் சாமாட் தமது விண்ணப்பத்தில் குறிப்பிட்டிருந்தார்.

TAGS: