ஜூன் 13 மினாரா அம்னோ கட்டிடத்திலிருந்து இடிதாங்கி விழுந்ததில் சேதமடைந்த கார்களைப் பழுதுபார்க்கும் செலவுகளைக் கொடுக்கக் காப்புறுதி நிறுவனங்கள் மறுத்துவிட்டன.
எனவே, மினாரா அம்னோ கட்டிட உரிமையாளரான ஜேகேபி சென்.பெர்ஹாட்தான் அச்செலவுகளை ஈடு செய்ய வேண்டும் என டிஏபி தஞ்சோங் எம்பி இங் வை எய்க் வலியுறுத்தியுள்ளார்.
அது பற்றி அதன் தலைமை செயல் அதிகாரிக்கு கடிதம் எழுதியிருப்பதாகக அவர் சொன்னார்.
அவ்விபத்தில் ஏழு கார்கள் சேதமடைந்தன.