அமெரிக்க உள்ளாட்சி தேர்தல் : மூன்று இந்தியர்கள் போட்டி

american-flag-2aநியூயார்க் : அமெரிக்காவின், நசாவ் மாவட்ட தேர்தலில், இந்திய வம்சாவளியை சேர்ந்த, மூன்று பேர் போட்டியிடுகின்றனர். அமெரிக்காவின், நியூயார்க் நகருக்கு அருகில் உள்ளது நசாவ் மாவட்டம்.

இப்பகுதியில் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள் அதிகம் பேர், வசிக்கின்றனர். இந்த மாவட்ட நிர்வாகி தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது.

மேயர் பதவிக்கு இணையான இந்த தேர்தலில், இந்திய வம்சாவளியை சேர்ந்த மூன்று பேர் போட்டியிடுகின்றனர். குடியரசு கட்சியை சேர்ந்த, எட்வர்ட் தற்போது, இந்த மாவட்டத்தின் நிர்வாகியாக உள்ளார்.

இந்திய வம்சாவளியை சேர்ந்த வழக்கறிஞர், மிலி மகிஜனி என்பவர், ஜனநாயக கட்சி சார்பில் இந்த தேர்தலில் போட்டியிடுகிறார். ஆந்திராவில் பிறந்த சங்கர் என்பவரும் இத்தேர்தலில் நிற்கிறார். வர்த்தகரான இவர், தனக்கு, “வெற்றி வாய்ப்பு அதிகம்’ என, நம்புகிறார். சித் நாதன் என்பரும், இத்தேர்தல் களத்தில் உள்ளார்.

கோல்கட்டாவில் உள்ள, தெரசா அறக்கட்டளையில் சிறிது காலம் பணிபுரிந்த, அமெரிக்க பெண், லாரா கிலன் என்ற வழக்கறிஞரும், இத்தேர்தலில் போட்டியிடுகிறார்.