ராணுவ ரகசியங்களை வெளியிட்ட அமெரிக்க வீரருக்கு 90 ஆண்டு சிறை

wikileaksவாஷிங்டன்: அமெரிக்க ராணுவ ரகசியங்களை, விக்கிலீக்ஸ் இணையதளத்துக்கு அளித்த, ராணுவ வீரருக்கு, 90 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.

ஆஸ்திரேலியாவில் பிறந்தவர் ஜூலியன் அசாஞ்ச். இவர், “விக்கிலீக்ஸ்’ இணையதளத்தை உருவாக்கி, அதன் மூலம், பல நாட்டு ரகசியங்களை வெளியிட்டார். இதில், அமெரிக்க ராணுவ ரகசியங்கள் அதிகம் வெளியிடப்பட்டு உள்ளன.

இதன் காரணமாக, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள், இவரைக் கைது செய்யக் காத்திருக்கின்றன. இதனால், லண்டனில் உள்ள, ஈக்வடார் நாட்டுத் தூதரகத்தில், அசாஞ்ச் தஞ்சம் அடைந்து உள்ளார்.

அமெரிக்க ராணுவ ரகசியங்களை, விக்கிலீக்சுக்கு அளித்ததை, அமெரிக்க ராணுவ வீரர், பிராட்லி மேனிங், ஒப்புக்கொண்டு உள்ளார். இதையடுத்து அவர் மீது, உளவு பார்த்தல், திருட்டு, கம்ப்யூட்டர் மோசடி உள்ளிட்ட, 20 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு உள்ளன. இந்த வழக்கில், பிராட்லிக்கு, 90 ஆண்டுகள் சிறைத் தண்டனை அறிவிக்கப்பட்டு உள்ளது.