பாஸ், இசி-என்ஆர்டி இணைப்பு குறித்து கேள்வி எழுப்புகிறது

வாக்காளர் பட்டியலில் 40,000 பெயர்கள் சந்தேகத்துக்குரியவை  என இசி என்ற தேர்தல் ஆணையம் ஒப்புக் கொண்டுள்ளதைத் தொடர்ந்து அதனையும் என்ஆர்டி என்ற தேசியப் பதிவுத் துறையையும் இணைக்கும் அலிஸ் என்ற கணினித் தொடர்பு முறைக்கு என்னவாயிற்று என பாஸ் அறிய விரும்புகிறது.

பொது மக்களுடைய ஆழமான ஆய்வுக்காக சந்தேகத்துக்குரிய 40,000 பெயர்கள் வெளியிடப்படும் என இசி தலைவர் அப்துல் அஜிஸ் முகமட் யூசோப் அறிவித்துள்ள பின்னர் ஜோகூர் பாஸ் இளைஞர் தலைவர் சுஹாய்சான் காயாட் அந்தக் கேள்வியை எழுப்பியுள்ளார்.

நாடு முழுவதும் ஆயிரம் இடங்களிலும் இசி இணையத் தளத்திலும் நாளேடுகளிலும் பொது மக்கள் பார்வைக்காக அந்தப் பெயர்கள் வெளியிடப்படும்.

“முதலாவதாக, வாக்காளர் பட்டியலைத் தூய்மைப்படுத்துமாறு மக்கள் விடுத்த கோரிக்கைக்கு ஒரு வழியாக செவி சாய்த்த அப்துல் அஜிஸுக்கு என்னுடைய வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்,” என்றார் சுஹாய்சான்.

“இதற்கு முன்னதாக என்ஆர்டி-யுடன் தன்னை இணைக்கும் அலிஸ் கணினி இணைப்பு முறை குறித்து இசி பெருமையடித்துக் கொண்டது.”

“என்றாலும் கேள்விக்குரிய 50,000 பெயர்கள் இருப்பதாக இதற்கு முன்னர் இசி அறிவித்தது. திடீரென்று ஐயத்துக்குரிய 10,000 பெயர்களுக்கு என்ன நேர்ந்தது என்பது எனக்கு நிச்சயமாகத் தெரியவில்லை”, என்றும் சுஹாய்சான் சொன்னார்.

சுஹாய்சான், பாஸ் கட்சியின் ஜனநாயக மறுவாழ்வு, உறுப்பினர் திரட்டுப் பிரிவின் தலைவரும் ஆவார்.

வாக்காளர்கள் உண்மையானவர்களா என்பதை விரைவாக அறிந்து கொள்ள இசி-க்காக என்ஆர்டி மிக நவீன புள்ளி விவரக் களஞ்சியத்தை பெற்றிருக்கும் போது அந்தப் பெயர்களை இசி பொது மக்களுக்கு அறிவிக்க வேண்டிய தேவை என்ன என்றும் அவர் வினவினார்.

TAGS: