நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் வியட்நாம் போரின் போது காணாமல் போன ஒரு தந்தையும் அவரது மகனும், அங்கு ஒரு காட்டுப் பிரதேசத்தில் வசித்து வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தற்போது 82 வயதாகும் ஹோ வான் தான் மற்றும் அவரது மகன் ஹோ வான் லாங் (41), ஆகிய இருவரும் வியட்நாம் போரின் போது ஒரு குண்டுத் தாக்குதலில் அவர்களது குடும்பத்தைச் சேர்ந்த மூவர் கொல்லப்பட்டதை அடுத்து தாங்கள் வசித்து வந்த கிராமத்தை விட்டு வெளியே தப்பியோடிவிட்டதாகக் கூறப்படுகிறது.
வியட்நாமின் மத்திய பகுதியில் இருக்கும் குவாங் இங்காய் மாகாணத்தில் உள்ள ஒரு காட்டுப் பகுதியில் அப்பகுதிவாசிகள் சுள்ளி சேகரிக்கச் சென்றிருந்தபோது, இவர்கள் இருவரையும் கண்டனர்.
பழம் மற்றும் கிழங்குகளை சாப்பிட்டு இந்த இருவரும் உயிருடன் இருந்ததாகக் கூறப்படுகிறது. அவர்கள் சோளமும் பயிரிட்டனராம்.
தரை மட்டத்திலிருந்து சுமார் ஐந்து மீட்டர் உயரத்தில் ஒரு மரக்குடிசையைக் கட்டி, வெளியுலகத் தொடர்பே இல்லாமல் அவர்கள் வாழ்ந்து வந்திருக்கின்றனர்.
தந்தைக்கு சிறுபான்மை மொழியான கோர் மொழி கொஞ்சம் பேசத் தெரியும். மகனுக்கோ அதில் ஒரு சில வார்த்தைகள் மட்டுமே பேச முடியும்.
போரின் சுவடுகள்….