அமெரிக்காவில் ‘மெஸ்ஸையா’ (மீட்பர்) என்று ஒரு குழந்தைக்கு வைக்கப்பட்ட பெயரை மாற்ற வேண்டும் என்று ஒரு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
உண்மையான ”மீட்பர்” இயேசுக் கிறிஸ்து மாத்திரமே என்று கூறியுள்ள அந்த நீதிபதி, அந்தக் குழந்தைக்கு மார்ட்டின் என்று பெயரை மாற்ற வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
டென்னிஸ்லாண்டில் உள்ள மெஸ்ஸையா டெஸ்வான் மார்ட்டின் என்னும் 9 மாதக் குழந்தையின் பெயரை ஏற்க விரும்பாத அதனது பெற்றோர் நீதிமன்றத்துக்கு சென்றுள்ளனர்.
ஆனால், அந்த பெயரை மாற்ற உத்தரவிட்ட நீதிபதி, மீட்பர் என்ற பொருள்படும் மெஸ்ஸையா என்ற பெயரை கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையாக வாழும் ஒரு மாநிலத்தில் வைத்திருப்பது சங்கடத்தை உருவாக்கும் என்று கூறியுள்ளார்.
கடந்த வருடத்தில் அமெரிக்காவில் 700க்கும் அதிகமான குழந்தைகளுக்கு மெஸ்ஸையா என்று பெயரிடப்பட்டது.
இயேசுவை, கிறிஸ்தவம் மெஸ்ஸையா என்று கூறும் அதேவேளை, யூத மதம் அதனை யூதர்களின் மீட்பர் என்ற பொருள்படப் பயன்படுத்துகிறது. மீட்பர் அல்லது விடுவிப்பவர் என்ற அர்த்தத்தை இந்தச் சொல்லுக்கு அகராதிகள் கூறுகின்றன. -BBC
ADA PONGGADA, NEENGALUM AVANUNGGE MAATHIRITHAAN, ULARIKIDDU IRUKKENGGA!
ELLA INATHIRKUM , ELLA MARKATHIRKUM, ORE MEATPER YESU KRISTHU ORUVARE. SATTHIYATHAAI ARIVEERGAL, SATHIYAM UNGGALAI VIDUTHALAI YAAKKUM. CUMMA NEEGE MULUMAYAI ETHUVUM THERIYAAMAL PESATHIRGAL !
இத அரபு நாட்டில் போயி சொல்லு…
இத இஸ்ரேல் நாட்டில் போயி சொல்லு…