இஸ்லாமாபாத்:””இந்தியர்கள் மீது, அளவு கடந்த அன்பும், பாசமும் கொண்டுள்ளோம்,” என, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.
காஷ்மீர் எல்லை பகுதியில், பாகிஸ்தான் ராணுவம், சமீபத்தில், அத்துமீறி தாக்குதல் நடத்தியதால், இருநாடுகளுக்கிடையே, பதட்டம் நிலவுகிறது.
இது தொடர்பாக, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், “டிவி’ உரையில் கூறியதாவது:கடந்த, 1947ம் ஆண்டுக்கு முன், இந்திய-பாகிஸ்தான் மக்கள் ஒன்றாக தான் இருந்தோம். சுதந்திரம் பெற்று, 65 ஆண்டுகள், ஆகி விட்டன.
தற்போது இருநாட்டு உறவை புதுப்பிக்க வேண்டியுள்ளது. இருநாடுகளும் கை கோர்த்து நல்ல நண்பர்களாக வேண்டும். அதன் பின், பிரச்னைகளை உட்கார்ந்து பேசி, அமைதியான முறையில் தீர்க்க வேண்டும்.இந்திய மக்கள் மீது அளவு கடந்த அன்பும், பாசமும் கொண்டுள்ளோம். வளமும், முன்னேற்றமும் ஏற்படுவதற்கு, இருநாட்டு உறவு அவசியம்.இவ்வாறு நவாஸ் ஷெரீப் கூறினார்.
நவாஸ் ஷெரீப்பின் இந்த பேச்சு, கடந்த மே மாதம், தேர்தலுக்கு முன்னதாக பேசியதாக கூறப்படுகிறது. இதை சம்பந்தப்பட்ட, “டிவி’ தவறுதலாக ஒளிபரப்பியதாக கூறுகின்றனர்.