பர்தா அணிந்த முஸ்லிம் இளம்பெண் மீது தாக்குதல்: பிரான்சில் பரபரப்பு

burkaபிரான்சில் 16 வயது முஸ்லிம் பெண் ஒருவர் மர்மநபர்களால் தாக்கப்பட்டுள்ள சம்பவமானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரான்ஸ் நாட்டில் முகத்திரை அணியும் முஸ்லிம் பெண்கள் மீது தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் மாலை 5.45 மணியளவில் மர்மநபர்கள் சிலர் 16 வயது முஸ்லிம் பெண் ஒருவரது முகத்திரையை கிழித்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதில் முகம் மற்றும் தொண்டை பகுதிகளில் காயமடைந்த அப்பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து பிரான்சின் உள்துறை அமைச்சர் மானுவேல் வேல்ஸ்(ஆயரெநட ஏயடடள) கூறுகையில், முகத்திரை அணியும் முஸ்லிம் பெண்கள் தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளாகின்றனர் என்றும் இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவிக்கின்றேன் எனவும் கூறியுள்ளார்.

மேலும், இச்சம்பவத்திற்கு காரணமான நபர்கள் மீது நடவடிக்கை எடுத்து அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளார்.

இதேபோல் பிரான்சில் கடந்த வராமும் முஸ்லிம் பெண் ஒருவர் தாக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.