சீனாவில் சிங்கத்துக்கு பதில் நாய்

lion dogசீனாவின் மிருககாட்சி சாலையொன்றில் ஆப்பிரிக்க சிங்கம் என்று வைக்கப்பட்டிருந்த விலங்கு, பார்வையாளர்களுக்கு முன்பு திடிரென குரைத்ததால் அது போலி என்பது வெட்ட வெளிச்சமானது.

உண்மையான சிங்கத்துக்குப் பதிலாக திபெத்தில் வளரும் மஸ்டிஃப் வகை நாயை அந்த விலங்கு காட்சி சாலை வைத்திருந்ததாக சீன ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

உடல் முழுதும் ரோமம் வளரும் திபெத்திய மாஸ்டிஃப் நாய் தூரத்தில் இருந்து பார்கும்போது சிங்கத்தைப் போலத் தோன்றும்,

இனப்பெருக்கத்துக்காக வேறு ஒரு இடத்துக்கு அந்த ஆண் சிங்கம் அனுப்பப்பட்டதால், அந்த கூண்டில், ஊழியர் ஒருவர் வளர்த்த இந்த நாய் வைக்கப்பட்டதாக அந்த மிருககாட்சி சாலையின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். -BBC