நியூசிலாந்தில் களைகட்டும் ஒருபால் திருமண கொண்டாட்டங்கள்

gay_marriageநியூசிலாந்தில் ஒருபால் திருமண கொண்டாட்டங்கள் களை கட்டுகின்றன.

ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் முதல்நாடாகவும் உலகில் 14வது நாடாகவும் நியூசிலாந்து ஒருபால் திருமணத்தை சட்டபூர்வமாக அங்கீகரித்துள்ளது.

இன்று திங்கட்கிழமை 31 ஒருபால் ஜோடிகள் திருமண பந்தத்தில் இணைந்துகொள்வதாக அரச உள்துறை புள்ளிவிபரங்கள் கூறுகின்றன.

நாட்டின் 1955 ஆண்டு திருமணச் சட்டத்துக்கு திருத்தம் கொண்டுவந்துள்ளதன் மூலம் கடந்த ஏப்ரலில் நியூசிலாந்து ஒருபால் திருமணத்தை சட்டப்படி அங்கீகரித்தது.

இந்த சட்டத்துக்கு கிறிஸ்தவ செயற்பாட்டாளர்களிடமிருந்து கடுமையான எதிர்ப்பு கிளம்பியிருந்தது.

ஆனால், ஆண்டாண்டு காலமாக இருந்துவந்த அநீதிக்கு இந்த சட்டம் முடிவுகட்டியுள்ளதாக திருமண சமத்துவத்துவதற்கான செயற்பாட்டாளர்கள் வாதிட்டனர்.

வேறுநாடுகளைச் சேர்ந்த ஒருபால் ஜோடிகளும் நியூசிலாந்தில் திருமணம் முடிக்க திட்டமிட்டுள்ளனர்.

ஆஸ்திரேலியாவிலிருந்து சுமார் 1,000 ஜோடிகள் நியூசிலாந்து செல்லவுள்ளனர். -BBC