பெனாசீர் பூட்டோவை கொலை செய்ய உதவினார்! முஷாரப் மீது குற்றச்சாட்டு பதிவு

Pervez_Musharrafபாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் பெனாசீர் பூட்டோ கொலை வழக்கில், அந்நாட்டின் முன்னாள் ஜனாதிபதியான முஷாரப் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் இராணுவ ஆட்சி நடத்திய முஷாரப் மீது சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளை சிறை வைத்தது உட்பட பல்வேறு சதி வழக்குகள் உள்ளன.

இதனையடுத்து நெருக்கடி முற்றவே இவர் சவுதியிலும், லண்டனிலும் தஞ்சம் அடைந்தார்.

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பாகிஸ்தான் வந்த முஷாரப் மீதான வழக்கின் விசாரணை தொடங்கியது.

இதனை தொடர்ந்து முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் பெனாசிர் புட்டோ கொலை வழக்கில் முஷாரப் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதாவது, கொலைக்கான முக்கிய காரணமாக இருந்ததாகவும், கொலை செய்யத் திட்டமிட்டதாகவும், கொலையாளிகளுக்கு உதவும் வகையில் செயல்பட்டதாகவும் ராவல்பிண்டி பயங்கரவாத எதிர்ப்பு நீதிமன்றத்தில் குற்றம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆனால் இந்தக் குற்றச்சாட்டுகளை முஷாரப் மறுத்துள்ளார்.

இவருடன் மேலும் 6 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். வழக்கின் விசாரணை 27ம் திகதி மீண்டும் நடக்கிறது.

கடந்த 2007 ல் ராவல்பிண்டியில் நடந்த தேர்தல் பிரசாரத்தின் போது பெனாசீர் தற்கொலை படையினர் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.