‘சுட்டுக்கொல்லப்பட்டவர்களின் உடலில் ஏராளமான துப்பாக்கிக் குண்டு காயங்கள் இருப்பது ஏன்?’

1 rayarபினாங்கில் சுட்டுக்கொல்லப்பட்ட ஐந்து சந்தேக நபர்களின் உடல்களை அவர்களின் குடும்பத்தார் பெற்றுக்கொண்டார்கள்.

உடல்களைப் பெற்றுக்கொள்ளுமுன்னர் அவர்கள் போலீசில் புகார் செய்ததாக அக்குடும்பத்தார் சார்பில் பேசிய ஸ்ரீ டெலிமா சட்டமன்ற உறுப்பினர் ஆர்.எஸ்.என். ராயர் கூறினார்.

அந்த ஐவரும் இரகசிய கும்பல்களைச் சேர்ந்தவர்கள் என்று கூறும் போலீசார் அதை நிரூபிக்க வேண்டும் என்றும் ராயர் கேட்டுக்கொண்டார்.

“அடுக்ககத்தின் 11-வது மாடியில் இருந்த அந்த ஐவரும் அங்கிருந்து தப்பி ஓடி இருக்க முடியாது.  கால், கைகளில் சுட்டாலே போதுமானது. ஆனால், போலீசார் அவர்களைத் தலையிலும் நெஞ்சிலும் முகத்திலும் கழுத்திலும் சுட்டது  ஏன்  என்பதுதான் புரியவில்லை”, என ராயர் கூறினார்.